அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கம் மூதறிஞர் ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனார் தலைமையில் 1982- ஆம் ஆண்டு சூலைத் திங்களில் கலந்துரையாடிய அளவில் திரு.அன்புபழம் நீ, முனைவர் ஔவை நடராசன், புலவர்.த. இராமலிங்கம்,எம்.ஏ, பி.எட், ஏழிசைவல்லி, எம்.ஏ முதலிய தமிழார்வலர்களுடன் உருவானது.
ஆட்சிமொழிக்காவலர் கீ. இராமலிங்கனாரின் மறைவிற்குப் பின்னர், சங்கம் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் தலைமையில் சில ஆண்டுகள் இயங்கிற்று. அவருடைய மறைவிற்குப் பின் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்.டாக்டர்.வெ.தெ.மாணிக்கம் அவர்களின் தலைமையில் சில ஆண்டுகள் இயங்கிற்று. 18.10.1998 முதல் பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள் தலைமையில் இயங்கிற்று.தற்பொழுது புலவர் த.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது.
சங்கத்திற்கு இப்பொழுது தமிழார்வம் உடைய 300 வாழ்நாள் உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் தலைவராகவும் துணைத்தலைவராகவும் விளங்கிய டாக்டர் வெ.தெ.மாணிக்கம், திரு. அன்புப் பழம் நீ ஆகியோர் இருவரும் 18.10.1998 முதல் புரவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில்(1982) புலவர் த.இராமலிங்கம் அவர்கள் செயலாளராகத் தொண்டாற்றினார். பின்னர்ச் சில மாதங்கள் பேராசிரியர் திருமதி எம்.இ.சரசுவதி அவர்கள் செயலாளராக இருந்தார். 1986 ஏப்ரல் திங்கள் முதல் டாக்டர் சு.வள்ளியம்மாள் அவர்கள் 14 ஆண்டுகள் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். இவருடைய மறைவுக்குப் பின்னர் 09.04.2009 முதல் அரிமா. துரை. சுந்தரராசுலு அவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் செயலாளராக நியமிக்கபட்டு பலரும் போற்றிப் புகழும் வண்ணம் பணிபுரிந்து வருகிறார்.
அண்ணாநகர்த் தமிழ்ச் சங்க வளரச்சிக்கு அரும்பணியாற்றி மறைந்த ஆட்சிமன்றக் குழுவினர்